யாழ்ப்பாணத்தின் தென்மாராட்சியிலுள்ள மிகவும் பிரசித்தமானதும், புராதனமுமான சுட்டிபுர அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான, இன்று தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த பன்னிரண்டு தினங்களாக நடைபெற்று வந்த, இந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று தீர்த்த மகோற்சவம் சுமார் 10.00 மணியளவில் ஆரம்பித்து பிற்பகல் 12.30 மணிவரை தும்புருவி தீர்த்தக்குளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை பூங்காவனமும், நாளை மறுதினம் சாந்தி மடையும் நடைபெறவுள்ளது.
தும்புருவி குளத்தில் மலரும் தாமரை பூக்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலுள்ள இந்து ஆலயங்களில், மகோற்சவ காலங்களில் பூசைக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுட்டிபுர அம்மன் ஆலயம் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில், கொடிகாமத்திலிருந்து சுமார் 3km தொலைவில் வரணி பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.