பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானம் மூர்த்தி, தலம், தீர்த்தம் விருட்சம் என எல்லாம் ஒருங்கே கொண்டுள்ள மிகவும் பழமையனதும் அநாதியுமான ஆலயம் ஆகும். (மூர்த்தி சண்முகப்பொருமான், தலம் கந்தவனம், தீர்த்தம் நறுதீர் கேணி).
அத்துடன் இவ்வாலயம் மூன்று சண்முக மூர்த்திகளையும் விநாயகர், நாகதம்மிரான், மகாவிஷ்ணு, வேல், முத்துக்குமாரசுவாமி, கார்த்திகேயர், நால்வர் (நாயன்மார்) நவக்கிரக நாயகர், வைரவர், மரம், பலிபீடம், தம்பம், தம்பப்பிள்ளையர், சுமித்திர சண்டேசுவரர் ஆகிய பரிவார மூர்த்திகளும் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தர்சன மண்டபம், தம்ப மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தர்சன மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றுடன் வன்னிமரப்பெருமான், திருக்குளம் என்பனவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி ஆலயமானது வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து கிழக்காக சுமார் 1.5 Km தொலைவில் உள்ளது. அத்துடன் இப் பிரதேசத்தின் ஒரு பகுதி வல்வை நகரசபைக்குட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.