மொறட்டுவு பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழருவி (கலை விழா) இன்று ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியளவில் ஆரம்பித்திருந்த இந்த விழாவில் அரங்கம் நிறைய பார்வையாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
பேராசிரியர் ஜெயவர்த்தன (உபவேந்தர் - மொரட்டுவை பல்கலைக்கழகம்) தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் (தலைவர் - அகில இலங்கை இந்து மன்றம்) அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
இக்கலை நிகழ்வுகளில் பட்டிமன்றம், நாடகம், நாட்டிய நாடகம், கவியரங்கம் என்பன போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. பட்டிமன்ற நிகழ்வில் மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுடன் மற்றைய பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகள் இரவு 10:30 வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொறட்டு பல்கலைக்கழகத்தில் சுமார் 500 வரையான தமிழ் மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமவிருந்தினர் உரையாற்றுகின்றார்
மொறட்டுவ பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் உப தலைவர் உரையாற்றுகின்றார்
தமிழருவி மலர் வெளியீடு
திரு.சொக்கன் ஞாபகார்த்த விருதைப் பெறும் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் - விவாத சமர் சொற்கணைக்காக
மாணவிகளின் நடனம்
பேராசிரியர் மெளனகுரு நெறியாள்கையில் நடைபெற்ற கூத்து, பரதநாட்டியம், பறை, கண்டி நடனம், அனுமான் நடனம், மட்டக்களப்பு அம்மன் பாட்டு
மட்டக்களப்பு அம்மன் பாட்டு
பறை
பரதநாட்டியம்
கூத்து - வானவில்லின் நிறங்கள்
அனுமான் நடனம்
கண்டி நடனம்
கண்ணகி நாட்டிய நாடகம்
பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம்
பட்டிமன்றம் - தகுந்த தலைமைகளைக் காட்டுவதற்கு இலங்கை தமிழ் ஊடகங்கள் வெற்றி பெற்றிருக்கின்றனவா
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.