பருத்தித்துறை – மருதங்கேணி வீதி முதற்கட்ட புனரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2016 (வியாழக்கிழமை)
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படும் பருத்தித்துறை – மருதங்கேணி வீதியின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவினால் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு செம்பியன்பற்றுப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்படட்டது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
நேற்று மருதங்கேணிச் சந்தியில் வீதி மேம்படுத்தலுக்கான தகவல் கொண்ட பெயர்ப்பலகையை அமைச்சர் திரை நீக்கம் செய்ததன் பின்னர் செம்பியன்பற்று தெற்கில் புனரமைப்பு பணியை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இதன் முதற்கட்டமாக பருத்தித்துறை, மருதங்கேணி– செம்பியன்பற்று தொடக்கம் புன்னையடி வரையிலான 7 கிலோ மீற்றர் வீதி கார்பட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. பின்பு 34 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த வீதியின் ஏனைய பகுதிகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கு பெரும் சிரமமாக இருந்து வந்த போக்குவரத்துப் பிரச்சினைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.