"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது - முழு படத்தொகுப்பும் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2013 (வியாழக்கிழமை)
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" இன்று (11-07-13) சுமார் 1000 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆசியுரையை திரு. தண்டாயுதபணிக தேசிகர் அவர்களும், வரவேற்புரையை முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களும் வழங்கியிருந்தார்கள்
நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மாவட்ட வைத்திய அதிகாரி, கழக உறுப்பினர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள் நலன்விரும்பிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.N.இராசநாயகம் (மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி விஜிதா சத்தியகுமார் (உதவிப் பணிப்பாளர் மத்திய சுற்றாடல் அதிகாரசபை) அவர்களும் திரு.ஜோகானந்தராசா (பிரதேச வன வள பரிபாலன அதிகாரி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வின் பொழுது பூங்கா அமையப் பெற்றுள்ள பகுதிகளில் 20 மரக்கன்றுகள் இன்று நாட்டப்பட்டிருந்தன. ஏனைய 40 மரக்கன்றுகள் பின்னர் நாட்டப்படவுள்ளன.
நெருக்கலான வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில், இப்பூங்கா அமைந்துள்ள பிரதேசமானது ஒரு திறந்த வெளிப் பிரதேசமாகவும், சுற்றிவர கோவிகள், சிறிய நீர்நிலைகள், மைதானம், அகன்ற வீதிகள், பனை மற்றும் மரங்கள் என ஒரு அழகானப் பகுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட பொதுப்பூங்கா சுமார் 62 பரப்பிலான நிலப்பரப்பில்
அமைகின்றது.
உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்பூங்கா, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து தென்மேற்குத் திசையில் சுமார் 400m தூரத்தில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.