வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் வீட்டில் திருட்டுச் சம்பவம், கணணி திருடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்களின் வீடு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அறியவருகின்றது. நேற்றையதினம் நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்கள் கொழும்பு சென்றிருந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவரின் கணணி திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமாக நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்களின் உறவினரால் வல்வெட்டித்துறைப் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாம் தொடர்புகொண்டு கேட்ட பொழுது, இத்தகவலை நகரசபைத் தவிசாளர் அவர்கள் எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.