படத்தில் காணப்படுவது இலங்கையில் யாழ்பாணத்தின் கிழக்கு கரையோரப் பிரதேசம் மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் அதிகமாகவும், வன்னியின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் ஓரளவாகவும் காணப்படும் நாவல் பழம் ஆகும். இது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் வெவ்வேறு பிரதேசங்களில் பல்வேறாக அழைக்கப்படும் நாவல் பழத்துக்கு இலங்கையில் தமிழில் மாத்திரமே பெயர் உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
வெவ்வேறு பிரதேசங்களில் நாவல் பழத்துக்கு வழங்கப்படும் பெயர்கள்:- மலேசியா – ஜம்புலா, இந்தோனிசியா – ஜாம் பெலாங்க், ஹிந்தி, உருது மற்றும் பஞ்சாபி – ஜமூன், தெலுங்கு - நெரெடு பந்து, தமிழ் மற்றும் மலையாளம் – நாவல் பழம், கன்னடா – நேரல கன்னு, பெங்கோலி – கலோஜாம், ஒரிசா – ஜமுகோலி, குஜராத் – ஜாம்பு, பிலிப்பைன் – லொம்பொய, மாலைதீவு – தன்பு, மலகாசி (மடகாஸ்கர்) - ரொட்ரா எனவாறு அழைக்கப்படுகின்றது.
நாவல் பழத்தை உண்பதனால் நா வறண்டு நீர் வேட்கை அதிகமாகின்றது. இவ்வாறாக நாக்கின் தன்மை மாற்றப் படுவதினால் நா + அல் (நாவல்) என நாவல் பழத்தைத் தமிழில் அழைக்கின்றோம். மருத்துவ ரீதியில் சிறுநீர் எரிச்சல், சிறு நீர்
கட்டுப்பாடு போன்றவற்றைப் போக்க சிறந்த பழமாகக் கருதப்படுகின்றது.
யாழ் தீபகற்பத்தின் கிழக்குக் பிரதேசங்களான நாகர் கோயில், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உள்ளடங்களான பிரதேசங்கள் மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் நாவல் பழம் மிக அதிகளவில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாவல்காடு என்னும் பகுதியில் மிக அதிகளவில் செறிந்து காணப்பட்டாலும் கடந்த காலங்களில் கணிசமான நாவல் மரங்கள் அழிவடைந்துள்ளன என்பது வருத்ததுடன் நோக்கத்தக்கது.
யாழ்பாணத்தில் நாவல் பழத்தின் காலப் பகுதி ஐப்பசி தொடக்கம் மார்கழி வரையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: September 25, 2016 at 00:56
மிகவும் சுவையான பழம். தகவலுக்கு நன்றி !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.