கடந்த 2015.10.25 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த தைப்பூச நன்நாளில் (24.01.2016) முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடப் பணிகளில் தற்போது மூன்றாம் கட்ட வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இவ்வேலைத் திட்டத்தின் முதற்கட்டமான அத்திவாரமிடுதலும், தூண்போடுதலும் நிறைவடைந்து, தொடர்து இரண்டாம் கட்டமாக கீழ்த்தள பாலர் பாடசாலையின் இறுதிக்கட்ட வேலைகள் (ஜன்னல் நிலை பொருத்துதல், பூச்சு வேலைகள் மற்றும் மின்ணிணைப்பு) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அத்துடன் மூன்றாம் கட்டமாக மேல்த்தள மண்டப வேலைகளும் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனவே தொடர்ந்து கட்டடப்பணிகளை முன்னெடுத்து எதிர்வரும் ஆண்டு (2017) தைப்பூசத்திருநாளிலும், கணபதி படிப்பகத்தின் பொன்விழா ஆண்டிலும் கட்டடத்தினை திறப்பதற்கு ஏதுவாக வேலைகளை துரித கதியில் முன்னெடுப்பதற்கு அனைத்து வேலைகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இது சம்பந்தமாக கணபதி படிப்பக நிர்வாகத்தினர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.