பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2016 (புதன்கிழமை)
பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக தனது 86ஆவது வயதில் சென்னையில் காலமானார். கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, 1930 ஆம் ஆண்டு யூலை மாதம் 6ஆம் திகதி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார்.
பாரம்பரியமிக்க இசை குடும்பத்தில் பிறந்த இவர், தனது 6 வயதிலிருந்து கச்சேரிகளை பாட ஆரம்பித்தார். இதன் பின்னர் தொடர்ந்து உலக நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளை நடத்தினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். 1967 ஆம் ஆண்டு ‛பக்த பிரகலாதா' என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இவருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும் இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே சிவாஜி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய ‛ஒரு நாள் போதுமா....', கவிக்குயில் படத்தில் ‛‛சின்ன கண்ணன் அழைகிறான்...' போன்ற பாடல்களையும் பாடியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.