யாழ். மாவட்டத்தில் விகாரைகளும்,பள்ளிவாசல்களும் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்டச் செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 3 விகாரைகள் கடந்த ஆண்டு புதிதாக முளைத்துள்ளன. குறித்த அறிக்கையில் இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 185 இனால் குறைவடைந்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு 4 விகாரைகள் காணப்பட்டன. தீவகம் தெற்கில் 2 விகாரைகளும், யாழ்ப்பாணம், வலிகாமம் தென் மேற்கில் தலா ஒன்றுமாக 4 விகாரைகள் இருந்தன.
மேலும், 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் புதிதாக 3 விகாரை கள் முளைத்துள்ளன.
இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 544 ஆகக் காணப்பட்டன. இது 2015 ஆம் ஆண்டு 185 இனால் குறைவடைந்து 2 ஆயிரத்து 359 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2014 ஆம் ஆண்டு 260 ஆக காணப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களின் எண்ணிக்கை 23ஆல் அதிகரித்து 2015ஆம் ஆண்டு 283 ஆகக் காணப்படுகின்றன.
மசூதிகள் 2014 ஆம்ஆண்டு யாழ். மாவட்டத்தில் 18 காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டு 19 ஆக அதிகரித்துள்ளன. யாழ். நகரிலேயே புதிய மசூதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு onlineuthayan இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.