வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் 60வது ஆண்டு விழா இன்று மாலை 05:00 மணியளவில், நெடியகாடு விளையாட்டு கழக மைதானத்தில், நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் தலைவர் திரு.K. N தேவதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்விளையாட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக R.T ஜெயசீலன் (பிரதேச செயலாளர் வடமாராட்சி வடக்கு பருத்தித்துறை) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு V. வேலும் மயிலும் (ஓய்வு நிலை பிரதேச செயலாளர்) அவர்களும், திரு K.K குமாரசிங்க (பொறுப்பதிகாரி, போலீஸ் நிலையம் வல்வெட்டித்துறை) அவர்களும், திரு K மயிலேறும் பெருமாள் (மாவட்ட வைத்திய அதிகாரி வல்வெட்டித்துறை) அவர்களும், திரு D.M வேதா பரணம் (தலைவர் உதைப்பந்தாட்ட லீக் பருத்தித்துறை) அவர்களும், திரு.சி. தவனேஸ்வரன் ( கிராம உத்தியோகத்தர் பொலிகண்டி மேற்கு J/393)அவர்களும் கலந்து கொண்டார்கள்.
பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் கணபதி பாலர் பாடசாலையின் பாலகர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நெடியகாடு பிள்ளையார் வீதியிலிருந்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
ஓலிம்பிக்தீபம் ஆனது வல்வைச் சந்தியிலிருந்து எடுத்து வரப்பட்டு நெடியகாடு மைதானத்தில் திரு.கரிகரன் அவர்களால் ஏற்றப்பட்டது. ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவனான திரு.கரிகரன், இதுவரை 7 தடவை தடவை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைதான விளையாட்டுக்கள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகமானது வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் பின்னர் இரண்டாவதாக தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுக்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு
கயிறு இழுத்தல், பெண்கள் - வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம்
தலையணைச் சண்டை - வல்வை விண்மீன் விளையாட்டுக் கழகம்
கழக அஞ்சல், ஆண்கள் - வல்வை விளையாட்டுக் கழகம்
கழக அஞ்சல், பெண்கள் - வல்வை விண்மீன் விளையாட்டுக் கழகம்
கயிறு இழுத்தல், ஆண்கள் - வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம்
இறுதி நிகழ்வாக ராகம் இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.