வல்வை நகரசபைக்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டு, நவம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில், வல்வை நகரசபை சபையால், அமைக்க முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுப் பூங்கா முயற்சிக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று காலை சுமார் 9:30 மணியளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இவ்வழக்கில் முதலாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வை நகரசபைத் தரப்பில் ஆயராகியிருந்தார். வல்வை நகரசபை மற்றும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் ஆகிய இருதரப்புக்களிலிருந்தும் தீருவில் பொதுப் பூங்கா பிரதேசத்துக்குரிய ஆதனங்கள் சமர்பிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து, வழக்கு எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.