எமது இணையதளத்தின் முக்கிய பகுதிகளை சிங்கள மொழியிலும் வெளியிட முடிவு. மூன்று மொழிகளிலும் அமையப்பெற்ற முதலாவது ஊரின் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
எமது பிரதேசத்தைப் பற்றிய விடயங்களை எமது இணையதளத்தில் சிங்கள மொழியிலும் வெளியிட முடிவுசெய்துள்ளோம். தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயங்களை எதுவித கருத்து மாற்றமுமின்றி அவ்வாறே பிரசுரிக்கவுள்ளோம். இது எமது பிரதேசத்தை பற்றி அறியவிரும்பும் தென்னிலங்கை மக்களுக்கு ஒரு சிறு வாயிலாக இருக்கக்கூடும்.
இதன் முதற்படியாக எமது இணையதளத்தைப் பற்றிய About us என்னும் பகுதி சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கையில் இவ்வாறு தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் என மூன்று மொழிகளிலும் அமையப்பெற்ற, அரசு மற்றும் பாரிய நிறுவங்கள் தவிர்ந்த, முதலாவது ஊர் சார்ந்த இணையதளமாகவும் எமது இணையதளம் விளங்கவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.