இன்று கப்பலுடையவர் ஆலயத்தின் பூங்காவனத்திருவிழா சிறப்புற நடைபெற்றிருந்தது.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரையில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. காலை சுமார் 13.00 மணியளவில் ஆரம்பமாகி பூங்காவனத் திருவிழா பிற்பகல் 16:00 மணி வரை நடைபெற்றிருந்தது.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி பத்து தினங்களாக நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 06.08.2013 அன்று நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 350m தொலைவில் அமைந்துள்ளது.
மேலதிக படங்கள் எமது Facebook இல் இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.