பத்திரிகைகளில் எமது அன்னபூரணியின் வரலாறு பற்றிய தகவல்கள் - ந.நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02.08.2013 ஆகும். அன்னபூரணி தொடர்பாக வந்திருந்த சில பத்திரிகைச் செய்திகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார்கள் வல்வை ஆவணக் காப்பகத்திச் சேர்ந்த திரு நகுலசிகாமணி அவர்கள்.
அன்னபூரணிக் கப்பலின் அமெரிக்கப் பயணத்தின் வைரவிழாவின் (1938 - 2013) ஆரம்ப நிகழ்வு வல்வெட்டித்துறை வரலாற்று ஆவணக்காப்பகத்தில் (Images of valvai) 27 -04 -2013 கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து லண்டன், கனடா மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளிலும், வல்வையிலும் எம்மவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பத்திரிகைகளில் எமது அன்னபூரணியின் வரலாறு பற்றிய தகவல்கள் :-
1. 'த பொஸ்டன் டெய்லி குளோப்' அமெரிக்கப் பத்திரிகையில் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று வெளியிட்ட பத்திரிகையின் செய்திகள் அதன் விலை அப்போது 2 சதம். இப்பத்திரிகை செய்தி வெளிவந்து 75 வருடங்களாகிவிட்டது.
2. லண்டனில் வாழும் அண்ணன் நு.மு.ராஜகோபால் 'ஈழகேசரி' பத்திரிகை ஆசிரியர் அவர்களினால் 1991ம் ஆண்டு எழுதப்பட்ட 'வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்' என்ற நூலின் விமர்சனம் 'இந்தியா டுடே' என்ற இந்திய சஞ்சிகையில் ஒக்டொபர் 6ல் வெளிவந்தது. விமர்சனம் எழுதியவர் கே.ஆர்.ஏ.நரசையா. இவர் கப்பல் தளபதியாகவும், கப்பல் பற்றிய ஆராய்ச்சி நூலையும் எழுதியவர்.
3. தமிழ்நாடு 'தினத்தந்தி' பத்திரிகையில், 24 -06 -2010ல் கோவையில் 3 நாட்கள் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த செம்மொழிமாநாட்டின்போது தினத்தந்தி இலவச இணைப்பாக வழங்கப்பட்ட சிறப்புமலரில் அன்னபூரணியும் இடம்பெற்றிருந்தாள். வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் சார்பாக கனடாவிலிருந்து நாம் இருவரும் சிறப்பு விருந்தினராக மாநாட்டிற்குச் சென்றிருந்வேளை இப்பத்திரிகை எமக்கு கிடைத்தபொழுது நாம் பெருமிதம் அடைந்தோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.