இன்று அதிகாலை 04.00 மணியளவில் கொடியேற்றத்துடன் செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2013 (புதன்கிழமை)
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை 0400 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 ஆம் திருவிழா அமையவுள்ளது.
பூஜை முறைகள், விளக்கு எடுத்தல், பூக்காரர், மௌனத்திருவிழா, ஏராளமான மடங்கள், அன்னதானம், நேர்த்திகள், பூக்காரர் திருவிழா என பல வித்தியாசமான நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ் ஆலயத்தின் பூங்காவனம் 15.08.2013 அன்றும், சப்பறத்திருவிழா 19.08.2013 அன்றும், தேர் திருவிழா 20.08.2013 அன்றும் அதனைத் தொடர்ந்து தீர்த்தத்திருவிழா 21.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது. அத்துடன் சந்நிதி கோயிலில் மட்டுமே நிகழும் '' பூக்காரர்'' திருவிழா 22.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது.
நிகழும் மகோற்சவத்தின் பின்னைய திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்ர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல குடும்பங்களை சேர்ந்தவர்களின் கீழ் தனிப்பட்ட முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில் இம்முறை மகோற்சவமானது பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களின் கீழ் வழி நடாத்தப்படுகின்றது.
செல்வச்சந்நிதி ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் 3km தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.