கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் பிள்ளையார் ஆலய மகோற்சவம் கடந்த (29-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இறுதி நாளான 06.08.2013 அன்று தீர்த்தத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையார் காலை 09.00 மணியளவில் ஊரணித் தீர்த்தக்கரையை அடைந்து, அங்கு தீர்த்தமாடிய பின், நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் தங்கியிருந்து மாலை 05.00 மணியளவில் தமது ஆலயத்தினை நோக்கி திரும்பினார்.
இரவுத்திருவிழாவின் போது கொடியிறக்கத்திற்கான பூசைகள் நடைபெற்று கொடியிறக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.