வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து இராணுவம் இன்னும் 3 வாரங்களில் விலகவுள்ளது?
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறைச் சந்தியில் கடந்த பல வருடங்களாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளிலிருந்து வெளியேறவுள்ளாதாக பரவலாக நம்பப்படுகின்றது. இன்னும் 3 வார காலத்தில் அப்பகுதிகளிலிருந்து தாம் வெளியேறவுள்ளதாக வல்வெட்டித்துறை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி தம்மிடம் இன்று கூறியதாக வல்வை நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவிக்கின்றார். ஆனாலும் இதை பக்கச்சார்பற்றமுறையில் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இது இவ்வாறிருக்க கடந்த சில நாட்களில் இராணுவத்தினர் வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து பெருமளவு தளபாடங்களை வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமையவுள்ள இராணுவ முகாமுக்கு கொண்டுசெல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அத்துடன் முகாமிட்டிருந்த ஒரு சில வெளிக் கட்டங்களிலிருந்து வெளியேறியுள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.
அமையவுள்ள ஊரிக்காடு இராணுவமுகாம் பகுதியில் 1990 ஆம் ஆண்டுவரை இராணுவத்தினரும் பின்னர் 1995 ஆண்டு வரையிலான காலப்பகுதிவரை விடுதலைப் புலிகளும் முகாமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.