வல்வை சென் செபஸ்தியர் தேவாலய திருத்த வேலைநிதி உதவி - PM foundation அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2013 (புதன்கிழமை)
வல்வை சென் செபஸ்தியர் தேவாலய திருத்த வேலைகளுக்கு இதுவரை நிதி உதவி செய்தவர்கள்
வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்துள்ள சென் செபஸ்தியர் தேவாலயப் புனரமைப்புக்கு நிதி உதவி கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் PM foundation முயற்சிகளை எடுத்திருந்தனர். அதற்கமைய பலர் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக PM foundation வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
07/08/2013
வல்வை சென்.செபஸ்தியர் தேவாலய திருத்த வேலைகளுக்கு நிதி உதவி செய்த அன்பர்களுக்கு நன்றிகள். வல்வையின் ஒரேயொரு தேவாலயமான சென்.செபஸ்தியார் தேவாலய புனரமைப்பு வேலைகளுக்கு வல்வை மக்கள் முன்வரவேண்டுமென 03/02/2013 ல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். பல வெளிநாட்டு வல்வை நலன்புரிச் சங்கங்களும்,வல்வை நலன்விரும்பிகள் பலரும் ஆர்வத்தோடு முன்வந்து உதவிகள் செய்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற நிதி விபரங்களை தேவாலய நிர்வாகம் எமக்கு அறிவித்துள்ளார்கள்.
3-Mr. R. Oliver Nicholas Ramesh (canada) Rs 1,00,000/=
4-Mr.Pakkiyanathar Gnanathas (London) Rs 94,255/=
5-Mr.Anantharaj. Navajeevan (canada) Rs 20,000/=
6-Mr.Sivasothy.Barathan (canada) Rs 12,500/=
7-Mr.Sivasothy Jegatheesan (london) Rs 12,500/=
8-Mr. Vadivelu.Surenthiran (london) Rs 10,000/=
உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் தேவாலய நிர்வாகம் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் லண்டன், அவுஸ்திரேலியா, கனடா (மொண்ட்ரியல்)ல் உள்ள வல்வை நலன்புரிச் சங்கங்களின் நிதிகள் இந்த மாதம் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்ததும் விபரங்களை அறியத்தருவோம்.
நன்றி.
PM Foundation (London)
PM foundation ஆனது சில வல்வை மக்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தன்னார்வ அமைப்பு. இது லண்டனைத் தளமாகக்கொண்டு செயற்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.