வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 04:00 மணியளவில் உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக வெளிக்கழகங்களுக்காக நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மிகவும் சிறப்புற நடைபெற்றிருந்ததால், இன்றைய இறுதி நிகழ்வுகளில் பெருமளவு பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிலும் ஒரு மாற்றத்தைக் காட்டும் ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட வல்வை நகரில், பல விளையாட்டுக்கழகங்கள் உள்ளது குறிபிப்டத்தக்கது. இவற்றில் உதயசூரியன் விளையாட்டுக்கழகதம் கடந்த வருடம் 50 ஆவது வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானம் , வல்வைச் சந்ததியிலிருந்து சுமார் 500m தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.