வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (VEDA) உத்தியோகபூர்வக் கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2012 (திங்கட்கிழமை)
இதுவரை காலமும் நெடியகாடு தெணி ஒழுங்கையில் இயங்கி வந்த, வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தனியார் வகுப்புக்கள் கடந்த இரு வாரங்களிலிருந்து, புதிய இடமான கொற்றங் கலட்டி, வேவில் ஒழுங்கையிலுள்ள ஒரு தனியார் வீடொன்றில் இயங்கி வருகின்றது.
இதன் அமைவாக இதுவரை காலமும் நெடியகாடு தெணி ஒழுங்கையில் இயங்கி வந்த வீட்டினை, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினர் உத்தியோகபூர்வமாக வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளதாக அறிவுத்துள்ளனர்.
படத்தில் வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாக அதன் பொருளாளர் திருமதி.சா.முருகவேல் அவர்கள் கையளிப்புச் செய்வதனையும், வீட்டின் உரிமையாளர்கள் சார்பாக திரு.கா.ரஞ்சனதாஸ் அவர்கள் பெற்றுக் கொள்வதையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.