இன்றைய தீர்த்தத் திருவிழாவுடன் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2013 (புதன்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை சுமார் 06:00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்ததைத் தொடர்ந்து சுமார் 09:00 மணியளவில் நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை மௌனத்திருவிழா நடைபெற்றிருந்தது.
வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழாவைப்போல், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் விழா இதுவென்பதால், யாழ்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் இன்றும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தேர் திருவிழா போல் இன்றும் காவடிகள், தூக்குக்காவடிகள், பாற் சொம்புகள், பஜனைகள் என கோவிலின் வீதிகள் பக்தர்களின் நேர்த்திகளால் நிரம்பியிருந்தது.
இன்றைய உற்சவத்தின் பொழுதும் சாரணர் இயக்கத்தினர் பக்தர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொண்டைமானாறு இளைஞர்கள் நீர்ப்பந்தல் அமைத்து பக்தர்களுக்கு தாக சாந்தி சேவையில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று உற்சவத்தின் இறுதி நாள் ஆகையால், ஆலயத்தின் புறவீதிகளில் பல்வேறு வகையான வியாபாரங்களும் களைட்டியிருந்தது. அரச மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் இன்றும் பல பிரத்தியேக சேவைகளை வழங்கியிருந்த குறிப்பிடத்த்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.