CWN (Children well wishers network) ஐச் சேர்ந்த திரு.ராஜேந்திரா அவர்களுக்கு மிரட்டல், போலீசில் முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2013 (வியாழக்கிழமை)
லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் CWN (Children well wishers network) ஐச் சேர்ந்த திரு.ராஜேந்திரா (மாஸ்டர்) அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கபாட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து திரு.ராஜேந்திரா அவர்கள் இது தொடர்பாக லண்டன் போலீசில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளதாகவும் திரு.ராஜேந்திரா தெரிவித்துள்ளார். அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலின் பொழுது வல்வெட்டித்துறைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் பெயர் பிரஸ்தாபிக்கப்படுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திரு.ராஜேந்திரா அவர்கள் வல்வெட்டித்துறையில் நிகரற்று விளங்கியிருந்த தனியார் கல்வி நிறுவனமான 'வல்வைக் கல்வி மன்றத்தின்' உருவாக்கத்திற்கு முன்னின்றவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.