மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் பெற்றோருடனான சந்திப்பு VEDA வில் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள கல்வி நிறுவனமான, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) நேற்று, கடந்த க.பொ.த (சா/த) பரீட்ச்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளான ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று (25-08-13) பிற்பகல் 03:30 மணியளவில் வேம்படியில் அமைந்துள்ள VEDA அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த நிகழ்வில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்கள், வல்வை நகரசபைத் தவிசாளர், சிதம்பரக் கல்லூரி அதிபர், வல்வை மகளிர் அதிபர், வல்வை சிவகுரு வித்தியாசாலை அதிபர், வல்வை ஒன்றியம் சார்பில் அதன் பொருளாளர், கழகப் பிரதிநிதிகள் சிலர், வாசிகசாலைப் பிரதிநிதிகள் சிலர், பெற்றோர்கள் மற்றும் VEDA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வு சுமார் 05:30 வரை நீடித்திருந்தது.
விருந்தினர்கள் அனைவரும் VEDA வின் பணி மற்றும் வளர்ச்சி பற்றி சிறப்பாக எடுத்துரைத்திருந்தனர்.
கவலை வெளியிட்டுள்ளனர்
நேற்றைய விழா நிகழ்வு பற்றி எமக்கு கருத்துத் தெரிவித்த VEDA சார்பில் கருத்துத் தெரிவிக்கக் கூடிய நிர்வாகி ஒருவர், தம்மால் அழைப்பு விடுக்கப்பட்ட போலும் சில கழகப் பிரதிநிதிகள் மற்றும் வாசிகசாலைப் பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
பெற்றோர்களுடனான சந்திப்பு
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்விற்கு முன்னர் பெற்றோர்களுடனான சந்திப்பும் இடம் பெற்றிருந்தமை குறிபிடத்தக்கது. இதில் மாணவர்கள் தேவைகள் பற்றிய பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தன
VEDA ஆனது எதுவித லாபம் அற்ற நோக்கில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டு காலமாக சிறப்பாகக் செயற்பட்டு வருகின்றது. வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.ரா) இதற்குரிய நிதிஉதவிகளை வல்வை ஒன்றியம் ஊடாகச் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
SINTHUJA (Sri lanka)
Posted Date: August 30, 2013 at 04:04
realy ,this is a good programme.This programme will encourage the students for study well.my congralutation to who get the prizes/award in this programme.And my whises to continue your service.
EDUCATION IS MUST BE IMPORTANT TO ALL PEOPLES.
Thulasi (Sri Lanka)
Posted Date: August 28, 2013 at 01:29
Valvettithurai is a very good and beautiful place. Enntha placela studentsa ennkarage panntathu romba nallathu. Athu mattumalla nanum vedala padichanan. Ennkaluku enntha villava sithathuku romba romba thankyou all the members.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.