தேசிய கடற்கரை கரப்பந்து போட்டியில் வீரகத்தி மகாவித்தியாலயம் மூன்றாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 3 ஆம்திகதி நீர்கொழும்பு உல்லாச கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலய அணியை எதிர்த்து புத்தூர் சோமாஸ்கந்த அணி மோதியது.ஆட்டம் ஆரம்பமுதல் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயஅணி 21:11, 21:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
பாடசாலை வரலாற்றில் 56 வருடங்களுக்கு பின்னர் கரப்பந்தாட்ட போட்டியொன்றில் தேசிய வெண்கலப்பதக்கம் பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.