கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை கடந்த 3 ஆம் திகதி கூடிய போது இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
எனினும், விண்ணப்பதாரிகள் உரிய பதிலை வழங்கியிருக்கவில்லை என அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகுதியான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.