சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை அமல்படுத்த இந்திய மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளது. இத் திட்டத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை - தடையை நீக்ககோரி இந்திய மத்திய அரசு மனுதாக்கல் செய்யவுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக தமிழகக் பத்திரிகையான தினகரன் தனது நேற்றைய செய்தியில் தெரிவித்துள்ளது.
இந்திய பெரும் கடல் மற்றும் வங்கக் கடல் இடையேயான பயண தூரத்தைக் குறைப்பதற்காக, இந்திய மத்திய அரசு அனுமதி அளித்து, சுமார் 25 ஆயிரம் கோடி செலவில் 2003 ஆம் ஆண்டு, சேது சமுத்திரப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இந்தத்திட்டத்தினால் கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் அழிந்து விடும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையடுத்து, மேற்கண்ட திட்டத்துக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், பாக்கு நீரிணையில் - யாழ் தீபகற்பத்தின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம் முக்கியத்துவம் பெறும் அதேநேரம் பாக்கு நீரிணையை அண்டியுள்ள (வல்வெட்டித்துறை உட்பட்ட) கடற்கரைப் பிரதேசங்களின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பாடலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.