தமிழில் மிக இலகுவாக தட்டச்சு (Type) செய்வது எப்படி?
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2013 (புதன்கிழமை)
தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய மிக நவீன வசதிகள் தற்பொழுது உள்ள பொழுதிலும், இன்னும் சிலர் இவை பற்றி அறியாமல் உள்ளனர். இதனைக் கருதத்தில் கொண்டும், எமது சில போசகர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தமிழில் தட்டச்சு (Type) செய்வது எப்படி என்பதை மிக இலகுவான வழிமுறைகளில், தேவையான படங்களுடன் (Screen shots) தெரிவித்துள்ளோம். வாசகர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று பெரிதும் நம்புகின்றோம்.
1. எங்கள் இணையதளத்தின் இடது பக்க Contents பகுதியில் உள்ள Useful links ற்குச் செல்லவும். (அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது)
2. அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள http://www.goggle.co.in/transliterate என்னும் தொடுப்பை (link) அழுத்தவும்
3. அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள பகுதியில் ஆங்கிலத்துக்குப் பதில் தமிழைத் தெரிவு செய்யவும்
4. இப்பொழுது விரும்பிய தமிழ் சொற்களை கீழே காட்டியவாறு ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யவும்
6. தற்பொழுது தேவையான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
7. தேவையான வசனங்கள் தட்டச்சு செய்யப்பட்டவுடன், அவற்றை Copy பண்ணவும்
8. Copy செய்த தேவையான வசனங்களை, தற்பொழுது வேண்டிய பகுதிகளில் (MS word, email, Face book etc)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மனோகரன் (United Kingdom)
Posted Date: March 30, 2015 at 21:42
வணக்கம் ஐயா,
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற விளக்கங்களை கொண்ட விபரணக் கொத்தை இன்று உங்கள் இதழின் முன் பக்கத்தில் கண்ணுற்றேன். இதணால் ஏராளமான வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம். மிக்க நன்றி ஐயா.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார் சாண்றோர்.
தமிழ் எல்லோருடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கி பிராவாகம் எடுத்து ஓடவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தளராத முயற்சியுடன் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் என்பதனை இன்றய உங்களது மீள்பிரசுர செய்கை எடுத்து காட்டுகிறது. இன்று மட்டும் என்றல்ல என்றுமே நீங்கள் தமிழ் வாழ தளராது உழைக்கிறீர்கள் என்பதனை உங்களது இணையத்தள இதழின் ஒவ்வொரு பக்கங்களும் தெளிவாக எடுத்து காட்டுகின்றன.
நீங்கள் நீட்டும் உங்களது நேசக்கரங்களை பற்றி தமிழ் கூறும் நல்உலகு பயன் பெறும் என்பது திண்ணம்.
வாழ்க தமிழ் வளமுடன்
வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு பலமுடன்.
நன்றி.
வணக்கம்.
ு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.