மிக துல்லியமாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுவரும் மாதிரி அன்னபூரணி, இறுதி வடிவ கண்ணாடிப்பேழை 6 x 3 x 6 வடிவில் அமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02 ஆவணி 13 ஆகும்.
இதனைச் சிறப்பிக்கும் வகையில் வல்வையில் அன்னபூரணி மாதிரிக் கப்பல் ஒன்று எமது முயற்சியினால் வடிவமைக்கப்பட்டுவருகின்றது. மிக துல்லியமாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுவரும் அன்னபூரணி மாதிரிக் கப்பலின் மரவேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
இதன் அடுத்த கட்டமாக பாய்கள் அமைக்கும் வேலைகள் இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து இறுதி கட்டமாக கண்ணாடி பேழை அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளது.
மாதிரக் கப்பல் உள்ளடங்கலான கண்ணாடிப் பேழையின் வடிவு சுமார் 6 x 3 x 6 அடி வடிவில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே காட்டப்பட்டுள்ளது 233 மீற்றர் நீளமான இந்த வருடம் தை மாதம் புதிதாக கட்டப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ள கொள்கலன் கப்பல் Hanjin Turkey' இனுடைய மாதிரி உருவம்
இதை போன்றதொரு அன்னபூரணியின் மாதிரி உருவம் ஒன்றை வடிவமைத்து, அதைனை நிரந்தரமாகக் காட்சிப்படுத்தி, அன்னபூரணியின் பெருமையையும், வல்வையின் கப்பல் கலையையும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதே எமது நோக்கம் ஆகும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.