தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவக் கலை பண்பாட்டு பேரவையினால் ஞானசுடர் 2017 வாசகர்களுக்கான 25 வினாக்கள் ஞானசுடர் மலரில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்போட்டியில் வயது வேறுபாடு இன்றி எவரும் பங்குபற்றலாம் எனவும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை அனுப்புவதாயின் அவை தனித்தனியாக அனுப்பப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் ஜப்பசி மாதம் வரை வெளிவந்த ஞானசுடர் மலர்களில் இருந்தே வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளதால் விடைகளும் மலரிலிருந்தே எடுக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை வாசகர் போட்டிக்குழு , சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை, செல்வசந்நிதி, தொண்டைமானாறு என்ற முகவரிக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்பு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. போட்டியின் பெறுபேறுகள் தைமாத ஞானசுடர் மலரில் வெளியிடப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.