வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோவில் தீர்த்த திருவிழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோயில் இன்று காலை 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் தீர்த்தத்திருவிழா ஆரம்பமாகியது. அதன் பின் அம்மாள் 08.30 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரையை அடைந்து அங்கு தீர்த்தமாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னிச்சியம்மன் கோயில் திருவிழாவானது கடந்த 29.08.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்றது. எதிர்வரும் திங்கட்கிழமை பூங்காவன திருவிழா நடைபெறும் .
வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தெற்கு திசையில் சுமார் 1km தொலைவில் பருத்தித்துறை யாழ்ப்பாண விதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rathai (Sri Lanka)
Posted Date: October 20, 2013 at 18:12
வல்வை முத்துமாரி அம்மன் கோவில் இந்திர விழா பற்றிய ஆரம்ப கால வரலாறு பற்றிய தகவல் தேவை.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.