வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் வேவில் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் ஆரம்பமாகியுள்ளது.
ரெயின்போ விளையாட்டுக்கழகத் தலைவர் திரு.முரளி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில், Dr.சு.பூரணச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், ரெயின்போ விளையாட்டுக்கழக ஆரம்பகால உறுப்பினர்களான திரு.வ.சோமசுந்தரம் மற்றும் திரு.ப.இந்திரலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
விழாவில் வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ், வல்வை போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான திரு.ரத்மால் ராஜபக்சே, வல்வை விளையாட்டுக்கழக முன்னால் தலைவர் திரு.தங்கவேல் மற்றும் வல்வையின் மூத்த விளையாட்டு வீரர் திரு.தேவசிகாமணி உட்பட்ட சில பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
ஆரம்ப நிகழ்வுகள் விழாவின் விருந்தினர்களைக் கௌரவித்தலுடன் ஆரம்பமானது. விருந்தினர்கள் வல்வெட்டித்துறை வேம்படிச் சந்தியிலிருந்து, கணபதிப் படிப்பகப் பாலர்களின் பாண்ட் அணிவகுப்புடன் ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
ஒலம்பிக் தீபமானமானது வல்வைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதி வழியாக ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டு ஏற்றப்பட்டது.
சற்று வித்தியாசமாக ரெயின்போ விளையாட்டுக் கழகத்தினர் தமது கழக இல்லங்கள் இரண்டிற்கும் ஆழிகுமரன், மற்றும் மகோற்கடமூர்த்தி எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆழிக்குமரன் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.குமார் ஆனந்தன் பல கின்னஸ் சாதனைகள் புரிந்துள்ள வீரர் ஆவார். திரு.மகோற்கடமூர்த்தி வாண வெடிபொருட்கள் மற்றும் வாண வேடிக்கைகள் செய்வதில் விற்பனர் ஆவார். மறைந்த இவர்கள் இருவரும் வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழிக்குமரன் ஆனந்தன் சம்பத்தப்பட்ட செய்தி ஒன்றை நாம் எமது இணையமான வல்வெட்டித்துறை.org இல் அண்மையில் பிரசுரித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மைதான மேடையில், ரெயின்போ விளையாட்டுக் கழக வீரர்களினால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட வெற்றிக் கோப்பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வுகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வேவில் பிள்ளயார் கோவிலில் நடைபெறும் வழிபாடு
விருந்தினர்கள் வல்வை வேம்படிச் சந்தியிலிருந்து அழைத்து வரப்படுகிறார்கள்
கணபதி படிப்பாக சிறுவர்களின் அணிவகுப்பு
வல்வைச் சந்தியிலிருந்து ஒலிம்பிக் தீபம் கொண்டுவருதல்
கழகத்தின் அணிவகுப்புக்கள் நடைபெறகின்றன
கொடிகள் ஏற்றப்படுகின்றன
ஆழிகுமரன் இல்லம்
மகோற்கடமூர்த்தி இல்லம்
பிரதம விருந்தினர் விழாவினை ஆரம்பித்து வைக்கின்றார்
கின்னஸ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் பதாகை
இல்லப்போட்டிகள் ஆரம்பம்
கீழ் பிரிவுக்கு உட்பட்ட சிறார்களின் உடற்பயிற்சி
பதிவேற்றம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.