வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02 ஆவணி 13 ஆகும். இதனை முன்னிட்டு கடந்த 7 ஆம் திகதி கனடாவின் ரொரண்டோ நகரில் அன்னபூரணி 75 கலைத் திருவிழா எனும் நிகழ்வு கொண்ட்டாப்பட்டது. இதனைத் தொகுத்து வழங்கியுள்ளார் கனடாவில் இருந்து திருமதி உமா நகுலசிகாமணி அவர்கள்.
செப்டெம்பர் 7ம் திகதி ரொரண்டோ Chinese Cultural Centere மண்டபத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மண்டபவாசலில் நுழைந்தபோது மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்ட அன்னபூரணியின் மாதிரி உருவம் திரு. சு.கோபி, திரு.பால சௌந்தரராஜன், நண்பர்களும் சேர்ந்து உருவாக்கி கனடா மொன்றியல் நகரிலிருந்து கொண்டுவந்து பார்வைக்கு வைக்கப்பட்டது எல்லோரையும் வருக வருகவென வரவேற்றது.
விழாவில் விளக்கேற்றிய பின்பு, செல்வி. ஹம்சா செல்வகுமாரின் கனடா தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பமாகி மடிந்த அனைத்து மக்களுக்கும் அஞ்சலியும் செய்யப்பட்டது. வல்வை நலன்புரிச் சங்கத் தலைவர் வி.ஆறுமுகம் தனது வரவேற்புரையில் வந்தவர்களை வரவேற்று வல்வை முத்துமாரியை வணங்கி விழா சிறப்புற வேண்டினார்.
அதனைத் தொடர்ந்து விழாவை C.M.R வானொலி அறிவிப்பாளர் திரு.கங்காதரன் தொகுத்து வழங்க முதலாவது நிகழ்வாக Mega Tuners இசைக்குழுவினரின் இன்னிசையில் செல்வி சாம்பவியின் பாடலுடன் ஆரம்பமாகி செந்தூரன் அழகையா, ஹரிபாஸ்கர், எலிசபெத் மாலினி, இன்னும் பல பாடகர்கள் தென்இந்திய பாடல்கள் அல்லாத முற்று முழுதாக ஈழத்துக் கலைஞர்கள் இயற்றிய பாடல்களை பாடினார்கள். வல்வையைச் சேர்ந்த ஒரு நடன ஆசிரியை திருமதி சுகிர்தா சுதாகர் அவர்களது நெறியாள்கையில் 'சாகரம் கடந்த சாகசக்காரி' இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளின் பங்களிப்புடன் நாட்டிய நாடகம் பார்வையாளர்களை எழுபத்தைந்து வருடங்களுக்கு முன் வல்வை மக்களின் சாதனையை நினைவுபடுத்தி சபையோரை மகிழ்வித்தது.
அடுத்து சிறப்பு நிகழ்வாக செல்வகுமாரின் எண்ணத்தின் பேரில் தமிழ்நாட்டில் வாழும் வல்வையைச் சேர்ந்த பிரபல ஓவியரான மோகன் ஆர்ட்ஸ் ராமதாஸ் மோகனதாஸ் அவர்களின் சித்திரங்களும் தமிழ் நீ பொன் சிவகுமாரனின் கதையுமாக 'அமெரிக்காவில் அன்னபூரணி' என்ற சித்திரக்கதைப் புத்தகத்தின் சிறப்புப் பிரதி Capton வைரமுத்து பாலசுப்ரமணியம், மகாலிங்கம் வரதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அடுத்து கதிர் செல்வகுமாரின் 'அலை ஆடிக்கொண்டாடும் பேரழகி' என்ற ஒலி இழைநாடவும் முதல் பிரதி அமிர். கணேஷ், லண்டனிலிருந்து வந்திருந்த தா. சண்முகதாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செயலாளர் கதிர் செல்வகுமார் அன்னபூரணி 75 வது நினைவுவிழாவில் கனடாவில் வாழும் எம்மவர்களில் பல்வேறு துறையில் தமது பங்களிப்பை ஆற்றியவர்களை வாழும்போது நாம் கௌரவிக்க வேண்டும் என்று தனது உரையில் கூறினார். வல்வை இளைஞர்களை கப்பலில் ஏற்றி பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர்களில் ஒருவரான திரு.தா.சண்முக தாஸ், Capton ஆக சேவை புரிந்த வகையில் திரு..வைரமுத்து பாலசுப்ரணியம், விளையாட்டுத் துறையில் சிறந்து பல வீரர்களை உருவாக்கிய திரு.மகாலிங்கம் லிங்கராஜா, நலன்புரிச் சங்கத்தின் ஆரம்பபணியாளரில் ஒருவரான திரு.கலிங்கராஜா, மொன்றியலில் இருந்து அன்ன பூரணியின் மாதிரி உருவம் உருவாக்கி ரொராண்டோவிற்கு எடுத்து வந்த திரு.கோபி, பாலா சௌந்தரராஜன் குழுவினருக்கும், வரலாற்றாய்வாளர் திரு. தமிழ் நீ பொன்.சிவகுமாரன், வல்வை வரலாற்று ஆவணக்காhப்பகம் திரு. ந. நகுலசிhகமணி ஆகியோருக்கும் அன்னபூரணி 75 நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நடனசிகாமணி நகுலசிகாமணி நினைவுச் சின்னத்தைப் ஏற்றுக்கொண்டு இக்கௌரவம் பெறுவதில் மகிழ்ச்சி. பேராசிரியர் கா.சிவத்தம்பி தமிழ்நாட்டில் உயர் விருதான வி.க விருது கிடைத்தபோது தாய்த்தமிழகத்தால் கௌரவிக்கப்படும் போது தனது சேவை உலகத் தமிழினம் ஏற்றுக்கொள்வதாக பெருமைப்பட்டு பேசியிருந்தார். அதுபோல தான் பணியாற்றிய நலன்புரிச் சங்கம் தன்னை கௌரவிக்கும்போது முழு வல்வையரும் தனது பணியை கௌரவித்ததுபோல பெருமையடைவதாக கூறினார்.
அன்னபூரணியின் கலைத்திருவிழாவை ஒழுங்கு செய்த செல்வகுமார் தம்பதியினருக்கு தலைவர் ஆறுமுகம் தம்பதியினரால் அன்னபூரணியின் மாதிரி சிறிய உருவம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இறுதியாக இன்னிசைக் குழுவினர்களுக்கும் பாடல்களைப் பாடிய பாடகர்களுக் கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டது. தமிழர் ஐக்கிய அமைப்பு திரு.கு.யோகராஜன் குழுவினர் பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்திருந்தனர். வீடியோ ரவி, மற்றும் ஈ-குருவி மற்றும் புகைப்பட கலைஞர்கள் விழாவை படம் எடுத்திருந்தனர். விழா இனிது நிறைவு பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.