சிதம்பராவில் ஒரு நாடகத்தில் தாத்தா வேடத்தில் நடித்ததனால் தாத்தா என அழைக்கப்பட்டவர் - முன்னாள் விளையாட்டு வீரர் A.R.சிவகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையின் முன்னாள் விளையாட்டு வீரரும், சிறந்த நாடகக் கலைஞரும் ஓய்வு பெற்ற தபால் அதிபருமான திரு. அருணாசலம் இராமசாமி சிவகுரு (தாத்தா) அவர்கள் கடந்த 10 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 91. 26.07.1922 ஆ ஆண்டு பிறந்த திரு.சிவகுரு அவர்கள் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். மேலும்
இளமைக்கால தாத்தா
சிறந்த விளையாட்டு வீரரான திரு.சிவகுரு அவர்கள், சிதம்பரக் கல்லூரி அணியிலும் அதன் பின்னர் நீண்ட காலம் வல்வை அணியிலும் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் வல்வை விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும், பருத்தித்துறை பிரதேசபை உதைபந்து சம்மேளனத்தின் தலைவராகவும் (PDFA - Point Pedro Divisional Football Association) விளங்கியிருந்தார்.
சிதம்பரக் கல்லூரியில்
சிறந்து உதைபந்து, கரப்பந்தாட்ட வீரரான இவர் வல்வை விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்திருந்தார்.
விளையாட்டுகளுக்கு அப்பால், நாடகத்துறையிலும் சிறந்து விளங்கிய இவர், வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் தாத்தா வேடம் இட்டு நடித்ததன் பின்னர் தாத்தா என செல்லமாக அழைக்கப்படிருந்தார்.
இவற்றை விட நெடியகாடு திருச் சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் பொருளாளர், உபதலைவர், கணக்குப் பரிசோதகர் போன்ற பொறுப்பினையும் இவர் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டிலிருந்து மறையும் வரை இவர் சிட்னியில் வசித்து வந்திருந்தார். இவருக்கு 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.