ஜனாதிபதியின் இன்றைய யாழ் விஜயத்தையொட்டி வல்வையிலும் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2013 (சனிக்கிழமை)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னனி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதையொட்டி நேற்று யாழ்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அறிவிப்பு வல்வெட்டித்துறையிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் ஒலி பெருக்கிகள் பொருத்தப் பட்டிருந்த முச்சகர வண்டியில் மேற்கொள்ளப் பட்டிருந்த அறிவிப்பின் பொழுது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னனி சார்பில் போட்டியிடும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பிரதான ஒழுங்கமைப்பாளர் திரு.இராமநாதன் அங்கஜன் அவர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
திரு.இராமநாதன் அங்கஜன் அவர்கள் வல்வெட்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.