மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் கந்தையா மகாலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட 9 நபர் கொண்ட சுற்றுத்தொடர் அரையிறுதிப் போட்டிகள் இன்று மாலை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது சுற்றுப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் 2 :1 என்ற கோல் கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவது சுற்றுப் போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் இரு அணிகளும் 2 :2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தமையால் நடுவர்களால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் ரேவடி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு ரேவடி விளையாட்டுக்கழகமும், நேதாஜி விளையாட்டுக்கழகமும் தகுதி பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.