வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள் வல்வை மாலுமிகள் நலன் புரிச்சங்கத்தின் வலுவூட்டலில் தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாத பிரிவில் தையல் வகுப்பில் கற்ற மாணவிகளிற்கான செயல்முறை பரீட்சை அண்மையில் நடைபெற்றது. இச் செயன்முறை பரீட்சைக்கு இருபத்தியொரு மாணவிகள் பங்குபற்றியதுடன், இப்பரீட்சை மேற்பார்வையாளராக மட்டக்களப்பில் இருந்து ஆசிரியர் ஒருவர் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாணவிகள் பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வந்து பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பருத்தித்துறையில் இயங்கி வந்த இக் கற்கைநெறி நிலையமானது தற்பொழுது இங்கு இயங்கி வருகின்றது.
வல்வை நகரசபைக்குச் சொந்தமான பழைய சந்தை கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெற்று வரும் NVQ தையல் கற்கை நெறியின் மாணவிகள் பரீட்சைக்கு தோற்றும் மற்றும் பகுதி நேர ஆங்கில வகுப்புக்களின் சில காட்சிகளை கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.