நேற்றைய போட்டியில் கரவெட்டி நவசக்தி அணியை வெற்றிகொண்டது வல்வை அணி, 3 ஆவது சுற்றுக்குத் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2013 (புதன்கிழமை)
யாழ் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் நேற்றைய 2 ஆவது சுற்றுப் போட்டியில் கரவெட்டி நவசக்தி அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது.
மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஆட்ட இறுதியில் தலா இரு கோல்களைப் பெற்று சமநிலைபெற்றன. செல்வன் பிரதீபன் மற்றும் செல்வன் ரசிகரன் ஆகியோர் தலா ஒரு கோல்களைப் அணிக்காகப் பெற்றுக் கொடுத்திருந்தனர்.
தண்ட உதையில் மிகச் சிறப்பாக ஆடிய வல்வை அணி, முதல் 3 தண்ட உதைகளிலேயே வெற்றியை ஈட்டிக் கொண்டு போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தது. வல்வை அணியின் கோல் காப்பு வீரர் செல்வன் ஜிவிதன் அபாரமாக 3 கோல்களையும் தடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க நேற்றைய சுற்றின் முதலாவது போட்டியில் நாவாந்துறை சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தெல்லிப்பளை கலைமகள் விளையாட்டுக் கழகம் மோதியது. இப் போட்டியில் நாவாந்துறை சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
போட்டிகள் யாவும் உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.
யாழ் மாவட்டத்திலுள்ள 64 உதைப்பந்தாட்ட அணிகள் இந்த உதைபந்துப் போட்டியில் பங்கு பெறுவதும், தற்பொழுது 2 ஆவது சுற்று நடைபெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மைதானம் அமைந்துள்ள யாழ்பாணம் காங்கேசன்துறை வீதி
மைதான நுழைவாயில்
1 ஆம் போட்டியில் நாவாந்துறை சென் அன்ரனீஸ், தெல்லிப்பளை கலைமகள் மோதுகின்றன
2 ஆம் போட்டியில் வல்வை அணி
2 ஆம் போட்டியில் வல்வை மற்றும் கரவெட்டி நவசக்தி வி.கழகங்கள் மோதுகின்றன
தண்ட உதை - உதையில் வல்வை அணி
தண்ட உதை - தடுப்பில் வல்வை அணி
(கோல் காப்பு வீரர் ஜிவிதன் அபாரமாக 3 கோல்களையும் தடுத்திருந்தார் )
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.