வல்வையில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் போன்றவற்றை இன்று பொலிசார் அகற்றினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2013 (வெள்ளிக்கிழமை)
தேர்தல் பிரச்சாரத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுற்றதையடுத்து, வல்வெட்டித்துறையில் காவல் துறையினர் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் வீதிகளில் வரையப்பட்டுள்ள தேர்தல் சின்னங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுவரொட்டிகளை அகற்றியும், வீதியில் வரையப்பட்டுள்ளவற்றை மையினால் அழித்தும் காவல்துறையினர் தொடர்ந்து கொண்டிருந்தனர். இன்று காலை 11 மணியளவில் மதவடி, ஆலடி மற்றும் ஊரிக்காடு போன்ற இடங்களில் இவற்றை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.