நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலின் வாக்குகள் முற்றாக எண்ணப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டி தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 87.65% வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. பொதுவாக யாழ் மாவட்டத்தில் அநேகமான தொகுதிகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சராசரியாக 80% ற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், உடுப்பிட்டி தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியானது, நல்லூர் தொகுதிக்கு அடுத்தபடியான அதிகபட்ச வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
நல்லூர் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 88.64% வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டி தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11.27 % வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.