நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இன்று மாலை அவருக்கு வல்வைப் பிரதேசத்தில் குதூகல வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை யாழில் இருந்து திரும்பிய திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வல்வெட்டி பிரதேசத்தில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் வல்வைச் சந்தியை வந்தடைந்த அவருக்கு, வல்வைச் சந்தியில் வைத்து பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் கரகோசத்துடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள், ஆதரவாளர்கள் என குழுமியிருந்த மக்கள் சகிதம் அவர், அவரது பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அலுவலகத்தில் வல்வை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.குமாரசிங்க மற்றும் வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் உட்பட பல வல்வைப் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
திரு.சிவாஜிலிங்கம் அவர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான N. ஸ்ரீகாந்தா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரமுகர்கள் என பலர் உடனிருந்தனர்.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் 7 ஆம் இடத்தில் உள்ளளர் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வைச் சந்தியில்
அலுவலகத்தில்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கரவெட்டி பிரதேச சபை தலைவர் வியாகேஸ்
திரு.ஸ்ரீகாந்தா மற்றும் Dr.மயிலேறும் பெருமாள்
வல்வை நகரசபைத் தலைவர் திரு ந.அனந்தராஜ் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி
அலுவலகத்துக்கு வெளியில் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.