வடக்கு மாகாணத்தில் காடுகளை அழித்து இடம்பெற்றுவரும் நிர்மாணப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாக அறிவித்துள்ள அரசு, வடக்கில் காடழிப்புக்களை கட்டுப்படுத்த விமானக்கண்காணிப்பு மாறும் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்லஸ் தேவனாந்தா எழுப்பிய, வடக்கில் இடம்பெற்றுவரும் காடழிப்புகளை தடுப்பதற்கு சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு ஜனாதிபதி சாபில் பதிலளித்த அரசு தரப்பு பிரதம கொறடாவும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்கவே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கில் வன அழிப்பினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். வடக்கில் வன அழிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேடமாக விமான கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஊடாக வன அழிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன அழிப்புக்களை கட்டுப்படுத்தி வருகின்றோம். அத்துடன் சட்டவிரோதமாக வன அழிப்பு செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்.
வடக்கில் காடுகளை அழித்து இடம்பெறும் நிர்மாணப் பணிகளை தடுப்பதற்கு சுற்றறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் விரைவில் அது அமுல்படுத்தப்பட்டு, இவ்வாறான நிர்மாணப் பணிகள் தடுத்து நிறுத்தப்படும் என்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 29, 2018 at 07:16
கடுமையான சட்டங்களைபோட்டாலே காடழிப்பு தானாக நிறுத்தப்படும் .விமானத்தின்மூலம் கண்காணிப்பது என்பது வீன்பணவிரையம் . தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் பாதுகாக்கப்பட்ட மரங்களும் காடுகளும் இப்பொது அழிக்கப்படுகின்றது என்றால் எங்கே தவறு நடைபெறுகின்றது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும் .இயற்கையை அழிப்பது எமது எதிர்கால தலைமுறையினரது நலமான வாழ்வை நாமே அழிப்பதற்கு சமமானது .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.