சுமார் 27,000 லொறி பொருட்களைச் சுமக்கவல்ல உலகின் மிகப்பாரிய கொள்கலன் கப்பல்கள் 20 சேவையில் ஈடுபடவுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2013 (வியாழக்கிழமை)
400 மீட்டர் நீளம் (0.4 கிலோ மீட்டர்), 59 மீட்டர் அகலம் 73 மீட்டர் உயரம் அளவுகளையுடைய மிகப் பாரிய கொள்கலன் கப்பல்கள் இருபதை டென்மார்க்கின் 'Mearsk' எனப்படும் கப்பல் நிறுவனம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. கடலியலின் பிரமாதம் எனக் கருதப்படும் இக் இக்கப்பல்கள் 18,000 Teus (Twenty Equivallent Units) கொள்ளளவுடைய சுமார் 27,000 லொறி பொருட்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்லக் கூடியவை.
Triple E (Economy of scale, Energy efficiency and Environmentally improved) எனும் வகையிலமைந்த இக் கப்பல்கள் ஒப்பிட்டு ரீதியில் குறைந்தளவு சக்தியுடன் இயங்கி, குறைந்தளவு CO2 வை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வருடம் 10 கப்பல்களையும் அடுத்த வருடம் 10 கப்பல்களையும் சேவையில் அமர்த்துவதற்காக இக்கப்பல்கள் தென் கொரியாவின் Daewoo Shipbuilding and Marine Engineering Co. Ltd இல் தற்பொழுது கட்டப்பட்டுவருகின்றன.
உலகின் ஒரு சில துறைமுகங்களுக்கே மட்டும் செல்லக் கூடிய இக்கப்பல்களை, கொழும்பில் அமைந்துவரும் புதிய கொள்கலன் துறைமுகமும், கையாளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கீழே காட்டப்பட்டுள்ளவை Triple E வகைக் கப்பல்களின் ஒரு ஒப்பீடு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.