எங்கள் மகன் சாருகேஷ் தனது உயர்தர பாடப் பரீட்சையில் விஞ்ஞான பாடப்பிரிவில் சிறந்த சித்தியடைந்துள்ளான்.அவனுக்கு இயல்பாகப் பிடித்தமான பாடங்கள்தான் அவை. எங்கள் தலையீடு சிறிதும் அங்கில்லை. Physics [ A* ] Chemistry [ A* ] Biology [ A* ] Maths [A விருப்பப்பாடம்] பாடசாலையின் சிறந்த மாணவர்களில் ஒருவராகவும் இருக்கும் இவன் Universty of Cambridge இல் மருத்துவம் [Medicine ] படிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளமை நமக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
முக்கியமாக, எந்தவிதமான டியூசனுமில்லாமல் இது நடந்துள்ளது. எங்கள் POSTOFFICE இருக்கும் BARTON வாழ் நண்பர்களின் உற்சாகமூட்டலும் ,குறிப்பாக எங்கள் குடும்ப நண்பரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான DAVID BURNS அவர்கள் கொடுத்த ஊக்கமும், முக்கியமாக தாயின் அரவணைப்பும் அவனை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தன. குழந்தையாய் இருந்த போது நடக்கும் வயதில் நடக்க முடியாமலும், சாப்பிடும் பருவத்தில் பால் மட்டும் குடித்தும் ,பேச வேண்டிய வயதில் பேச முடியாமல் இருந்தவன் எங்கள் மகன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thevarajah Sivakumarasamy (Sri Lanka)
Posted Date: August 21, 2018 at 16:38
Congratulations Sarugesh.. Well Done.. Best wishes for Successful Medicine Completion..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.