வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் நேற்று வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 5 நபர் கொண்ட கடற்கரை உதைபந்து உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழக A அணியை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகம் மோதியது. 1:1 என்ற கோல் கணக்கில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் தண்ட உதையில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
போட்டிகள் மாலை 5 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரை மின்னொளியில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.