உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2018 (சனிக்கிழமை)
எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட இருக்கிறது.
உதைபந்தாட்ட ஆற்றலை சர்வதேச மட்டத்திற்கு நகர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதால் அதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
நாட்டு அணிக்கே விளையாட முடியாமல் இருக்கிறதென்ற கருத்து நம்மிடையே இன்றும் நிலவுகிறது. சொந்த நாட்டால் நிராகரிக்கப்பட்ட வீரர்கள் எப்படி வெளிநாட்டு அணிகளில் சேர்ந்து தங்கப்பந்தை வென்றார்கள் என்ற தகவல்கள் இந்த நூலில் உள்ளது.
திறமையை வளர்த்து அதை சரியாக நெறிப்படுத்தினால் உலகப்புகழ் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை வழங்கும் தகவல்கள் ஒவ்வொரு வீரர் வாழ்வோடும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.
வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
I.Thurailingam (UK)
Posted Date: September 08, 2018 at 14:05
திரு துரை அவர்களுக்கு,
இது தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு புத்தகம். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று துடிக்கும் தமிழ் மக்களுக்கு வெளிநாட்டை எப்படி யாழ்ப்பாணம் கொண்டு வரலாம் என்பதை உணர்த்தும் என்றெண்ணுகிறேன். இப்பொழுதே மான்செஸ்டர் யுனைட்டெட் இல் இருந்து அழைப்பு வருவதை எண்ணிப் பார்க்கின்றேன். தமிழ் இளைஞர்களால் முடியும். அதற்கு உங்கள் புத்தகம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.
நீங்கள் இதுபோல மேலும் பல புத்தகங்கள் தொடர்ந்து ஏழுதி தமிழ் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது அவா. குறிப்பாக உறங்கிக் கிடக்கும் கப்பல் தொழில் மீண்டும் எழுச்சி பெறவேண்டும். அதற்கு என்னாலாய கப்பல் நுணுக்கங்களை தந்து உதவ ஆவலாக உள்ளேன். அது பற்றி ஒரு புத்தகம் உங்கள் உரை நடையில் வெளிவந்தால் இளைஞர்கள் விழித்தெழுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இன்னும் இங்கு இலண்டனில் இப்புத்தகம் கிடைக்கும் இடம் தெரியவில்லை. உங்கள் மின்னஞ்சல் திரும்பிவிட்டது. புதிய மின்னஞ்சல்ää தொடர்பு முறையை அறியத்தரவும்.
துரைலிங்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.