வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள சுவாமிகள் தீர்த்த மடம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்த மண்டபம் மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள கடற்கரை ஆகியவற்றின் புணரமைப்புக்கு ரூபா 2 லட்சம் நிதியுதவியினை தனது கடந்த வருட (2017) மாகாண சபை நிதியிலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் ஒதுக்கியிருந்தார்.
வல்வெட்டித்துறை மற்றும் இதனை சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 25 ற்கு மேற்பட ஆலய மூர்த்திகள் தீர்த்தமாடும் இப்பகுதியில் அமைந்துள்ள குறித்த தீர்த்த மடம் மற்றும் ஊரணி தீர்த்தக் கடற்கரை பகுதியை வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியை திரு.சந்திரசேகரம் என்பவரின் மூதாதையரை தொடர்ந்து, தற்பொழுது சந்திரசேகரம் குடும்பத்தினர் மற்றும் நெடியகாடு பொதுமக்கள் இவற்றினை தொடர்ந்து பராமரித்துவருகின்றமை
கீழே படத்தில் தீர்த்த மடத்தில் இடம்பெற்றுவரும் புனரமைப்புப் பணிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.