சைனிங்ஸ் வி.க சுழல் கிண்ண உதைபந்து தொடர் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண உதைபந்தாட்ட தொடர் (2 ஆம் வருடம்) நேற்று ஆரம்பமானது. நிகழ்வை வல்வை மற்றும் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.
நேற்றைய முதலாவது போட்டியாக கடந்த வருடம் வைத்தியப்பா ஞாபகார்த்த சுழல் கிண்ணத்தை வென்ற நடப்புச் சம்பியன் இளங்கதிர் அணியுடன் சைனிங்ஸ் அணி மோதியது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இளங்கதிர் அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.
ஆட்டநாயகன் விருதினை இளங்கதிர் வீரன் பிரசாந் பெற்றார்.அவருக்கான பதக்கத்தினை சைனிங்ஸ் முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் வழங்கி கெளரவித்தார்.
தொடரில் வெற்றிபெறும் 1 ஆம் 2 ஆம் நிலை அணிகள் 10,000/- marrum 5,000/- ரூபாவினை முறையே வெற்றிக் கிண்ணத்துடன் பெறவுள்ளன.
போட்டிகள் வல்வை றெயின்போ மைதானத்திலே நடைபெறுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.