புட்டணி பிள்ளையார் கோயிலுக்கு புதிய 60 KW மின்பிறப்பாக்கி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் புட்டணி பிள்ளையார் கோயிலுக்கு 60 KW வலுவுடைய புதிய மின்பிறப்பாக்கி ஒன்று நேற்று, வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்பிறப்பாக்கி மூலம், கோயிலுக்குத் தேவையான மின் தேவை சுயமாக பெற்றுக்கொள்ளப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
கீழே படத்தில் புதிய மின்பிறப்பாக்கி கோயிலில் பாரம் கொடுக்கப்படுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: April 18, 2015 at 02:28
புலம் பெயர்ந்த நாடுகளிலும் ,ஊரிலும் ,கோவில்களுக்கு செலவிடும் பணத்தை ஊரின் வளர்சிக்கு செலவிட்டால் ஊராவது முன்னேறும் .ஊரின் தொழில் வளர்சியும் முன்னேற்றமடையும் .கோவில்களால் ஊரில் ஒவ்வரு ஆண்டும் குழப்பம்தான் ,ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதட்க்குத்தான் கோவில்கள் உருவாக்கப்பட்டது அந்த கோவில்கலாலேயே ஊரில் குழப்பம் என்றால் ,முக்கியமாக முத்துமாரி அம்மன்கோவில் திருவிழா வந்தால் ஊரில் ஒரே குழப்பம்தான் .ஒற்றுமைதான் எமக்கு துனையாகைருக்கும் .பிரசனை பட்டுக்கொண்டிருந்தால் சூழ்ச்சி செய்பவர்களுக்கு வசதியாகிவிடும். குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது சுலபம் .ஊர் பெரிய மனிதர்கள் அனைவரும் பேதங்களை மறந்து உங்களது தனிப்பட்ட பிரசனைகளை விட்டுவிட்டு ஊரின் ஒற்றுமைக்காக வளர்சிக்காக விவேகமுடன் செயல்பட்டால் ஊருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது தெழிவுடன் சிந்தியுங்கள் .
நன்றி
பணிவுடன்
வெற்றியரசன் (சா .பெ .ராஜ்குமார் )
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.