இன்று பரவலாக இடம்பெறவுள்ள மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில் பொதுப் பூங்காவில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தீருவில் வெளியில் கடந்த ஒரு வாரமாக சிரமதானப் பணிகள் இடம்பெற்றுவந்தது.
இன்று மாலை இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தலைச் சிறப்பிக்கும் வண்ணம் தீருவில் வெளி தற்பொழுது சிகப்பு மற்றும் மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீருவில் வெளிக்கான பிராதான பகுதிகளான தூபி வீதி, தீருவில் - சிவபுர வீதியின் ஒரு பகுதி, தீருவில் வெளி என்பன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெளியின் மத்தியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக தீருவில் வெளியில் பகிரங்கமாக மாவீரர் நினைவேந்தல் இன்று இடம்பெறவுள்ளது. நிகழ்வுகள் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு வல்வை இளைஞர்களால் சிறு உணவாகாரங்களும் வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.